10

சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் எனக்கு பரிசளிக்கப்பட்ட திருமறையின் பிரதியை எடுத்துப் பார்த்து அதிர்ந்தேன். அது சகோதரர், மார்க்க அறிஞர் பி.ஜெ. அவர்கள் விளக்கக் குறிப்புகளுடன் தமிழாக்கம் செய்திருந்த குர்’ஆன் பிரதி. அதிலென்ன அதிர்ச்சி என்கிறீர்களா? சொல்கிறேன். முதல் இரண்டு பக்கத்தில்தான் என் அதிர்ச்சி. முதல் பக்கம்

 

”ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்’ஆன்” (புகாரி 4598, 6732)  என்ற நபிமொழி மட்டும் உள்ளது. இது ஒரு நபிமொழி மட்டுமல்ல. இது ஒரு குறிப்பு. நபிகள் நாயகம் (ஸல்) அற்புதங்ள் நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவரல்ல என்று சொல்லவருதன் குறிப்பு.

PJ Quran-3ஆனால் பெருமானார் தன் வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். நான் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்தான் என்று அவர்கள் சொன்னது பணிவின் பொருட்டே. ஒருவர் என்ன நோக்கத்தில் பேசுகிறார் என்று புரிந்துகொள்வதே புரிந்துகொள்வதாகும். சொன்ன வார்த்தையை மட்டும் பிடித்து வவ்வால் மாதிரி தொங்கிக் கொண்டிருப்பது ஒருவகையான சிந்தனைச் சோம்பேறித்தனமாகும். பெருமானார் நிகழ்த்திய அற்புங்களுக்கு சில உதாரணங்கள் தருகிறேன். ஒரு முறை தன் உமிழ்நீரை அலீ (ரலி) யின் கண்ணின் மீது தடவி கண் வேதனையை குணப்படுத்தியிருக்கிறார்கள்(புகாரி 4:58, 5:170, ஹம்பலி இமாமின் முஸ்னத் 1:85, மற்றும் முஸ்லிம், தபரானி) வாய் கொப்பளித்த தண்ணீரை மீண்டு கிணற்றுக்குள் உமிழ்ந்து அந்நீரை குடிக்கத்தகுந்த இனிப்பான நீராக மாற்றியிருக்கிறார்கள் (புகாரி, பாகம் 4, அத்தியாயம் 56, எண் 777). PJ Quran-5ஏன் சந்திரனை இரண்டாகப் பிளந்திருக்கிறார்கள் (54:01). மி’அராஜ் பயணம் சென்றிருக்கிறார்கள். எல்லாமே அற்புதங்கள்தான். திருக்குர்’ஆனின் மகிமையை எடுத்துச் சொல்ல, அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதாகவே மேலே முதலில் குறிப்பிடப்பட்ட ஹதீஸை எடுத்துக்கொள்ளவேண்டும். வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் எனக்கில்லை என்று சொல்ல வருவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் என் அதிர்ச்சி இந்தக் குறிப்பு தொடர்பானதல்ல. அது அடுத்தடுத்த பக்கங்களில் இருந்தது. இரண்டாம் பக்கத்தில், பொருளடக்கம் உள்ள பக்கத்துக்கு முதல் பக்கத்தில்

PJ Quran-2திருக்குர்’ஆன்

  • குர்’ஆன் – மூலம் – அறிமுகம் – வரலாறு
  • தமிழாக்கம் — விளக்கவுரை —  அட்டவணை
  • கலைச் சொற்கள் —  அறிவியல் சான்றுகள்
  • வசனங்களின் பின்னணி — நபிகளாரின் விளக்கம்

என்று போட்டு கீழே

பி.ஜைனுல் ஆபிதீன்

Moon Publications

Wahiduddin Khan Qஎன்றிருந்தது! அதுதான் என் அதிர்ச்சியின் முதல் காரணம். குர்’ஆன் மூலமும் அவர்தானா! இப்படிச் சொல்வதற்காக இறைவன் என்னை மன்னிப்பானாக! ஆனால் அப்படி ஒரு பொருளை அந்தப் பக்கம் கொடுக்கிறது.

இதுவரை உலகத்தில் குர்’ஆனை எத்தனையோ அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர், விளக்கவுரைகள் எழுதியுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழாக்கம், விளக்கவுரை என்பதன் கீழே மட்டும்தான் தங்கள் பெயர்களைப் போட்டுக்கொண்டனர். குர்’ஆன் – மூலம் என்று போட்டு தன் பெயரைப் போடும் பைத்தியக்காரத்தனத்தை இதுவரை யாரும் செய்யவில்லை. நான் சில மொழிபெயர்ப்புகளின் அட்டையையும் இங்கே கொடுத்துள்ளேன். மௌலானா யூசுஃப் அலி, மர்மட்யூக் பிக்தால், தாவூத், வஹீதுத்தீன் கான் மற்றும் IFT வெளியீடுகள் ஆகியவற்றை உதாரணமாகக் காட்டியுள்ளேன். இவற்றுக்கும் பி.ஜெ.யின் பிரதிக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். Yufuf Ali Qசரியான கோணத்தில் இதை எடுத்துக்கொள்வோம். திருமறை இறைவனுடைய பேச்சு என்பது உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்த உண்மை என்பதால், யாரும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று இதை ஒதுக்கிவிடலாம். வேறு என்ன செய்வது? அடுத்து பக்கம் 11ம் தொடங்குகிறது என் அடுத்த அதிர்ச்சி. “வாசிப்பதற்கு முன்” என்ற தலைப்பு கொண்ட பகுதி அது. அதில் நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார்.  இவ்வாறு அவர் பத்தாண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?…இது போலவே திருக்குர்’ஆனும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது.

கடைசியில் Pickthal Qசொந்த மகனைக்கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ‘நம்ம பையன்’ என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதில்லை. புரிந்துகொள்வதும் இல்லை. இதுபோல்தான் நாம், நம்மை, நம்மிடம் என்பன போன்ற சொற்கள் குர்’ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன் என்று கூறுகிறது. இதிலென்ன அதிர்ச்சி என்கிறீர்களா? ஒரு தந்தை தன் மகனோடு பேசுவதுபோல அல்லாஹ் பெருமானாரிடம் பேசியுள்ளான் என்று திரும்பத் திரும்ப இன்ற மூன்று பக்கங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இறைவனைத் தந்தையாகக் கருதுவது, பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற முத்தெய்வக் கொள்கையுடைய கிறிஸ்தவர்களது நம்பிக்கையாகும். ஏதோ உதாரணத்துக்காக இப்படிக்கூறியிருக்கலாம் என்று என்னால் கருதமுடியவில்லை. யூட்யூபில் சில விடீயோ கிளிப்பிங்-குகளைப் பார்த்தபோதும் இந்த எண்ணம் உறுதிப்பட்டது. டி.என்.டி.ஜெ. அடித்த ஒரு போஸ்டரில் அல்லாஹ்வை ’கர்த்தர்’ என்று குறிப்பிட்டு அதை நியாயப்படுத்தியும் பி.ஜெ. பேசுகிறார். (கீழே காணொளி பார்க்க)

கேள்வி 1) அப்படியானால் பி.ஜே அன் கோ எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது? இத்தனையும் பத்தாதென ஒரு தான் ஏற்கனவே சொல்லிய பல விஷயங்கள் தவறுகள்தான். இப்போது அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம் என்று ஒரு காணொளியில் அந்தர் பல்டி அடித்திருக்கிறார் கேள்வி 2) இப்படியே பல்டிகள் அடித்துக்கொண்டே போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்? கேள்வி 3) நிச்சயத்தைன்மையில்லாத, முரண்பாடான கருத்துக்களின் மூட்டைகளாக விளங்கும் இவர்களை இனியும் இளைஞர் சமுதாயம் நம்பி பின்னால் போகவேண்டுமா? இறுதியாக அவரது திருமறையின் தமிழாக்கம் பற்றி ஒன்று சொல்லவிரும்புகிறேன். 2010-ல் நடந்த ஒரு விவாதத்தில் அன்புள்ள சகோதரர்களே, குர்’ஆனையும் ஹதீஸையும் விளங்குவதற்கு இமாம்களுடைய விளக்கங்கள் தேவையில்லை. அவர்களுடைய விளக்கங்கள்தான் குர்/ஆன் ஹதீஸை விளங்குவதற்கு அவைகள்தான் முட்டுக்கட்டையாக உள்ளன என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்தின் நிலைப்பாடு – இது ஒரு விவாதத்துக்கு உரிய விஷயமே அல்ல. ஏனென்றால் குர்’ஆனை மனிதர்கள் விளங்குவதற்காக வேண்டி அல்லாஹ் தந்திருக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை குர்’ஆனை விளக்குவதற்காக அனுப்பியிருக்கிறான்…….அவர்கள் சொன்னது விளங்கவில்லை என்று சொன்னால் அதனுடைய கருத்து அல்லாஹ்வுக்கு விளக்கத் தெரியலெ, அல்லாஹ்வுடைய ரஸூலுக்கு விளக்கத் தெரியலெ,…வெறெ ஒரு ஆள் வந்துதான் வெளக்க வேண்டியிருக்கு என்பது எவ்வளவு டேஞ்சரான, பாரதூரமான, அல்லாஹ்வையும் ரஸூலையும் இழிவு படுத்தக்கூடிய ஒரு விவாதம் என்பதை சிந்தித்தாலே இது எளிதாக விளங்கிவிடும். அல்லாஹ்வுக்கு விளக்கத் தெரியல என்பதை ஒத்துக்கொண்டால்தான் இன்னொருத்தருடைய தயவு தேவை என்று வரும்…வெறெ ஒருத்தராலதான் குர்’ஆனை விளக்கவேண்டியுள்ளது என்பது அல்லாஹ்வை மறுக்கிற, அல்லாஹ்வை நிராகரிக்கிரதாகும்,  என்று அக்டோபர் 30, 2010-ல் அவர் பேசியிருக்கிறார் . கேள்வி 4) அப்படியானால் இவர் ஏன் குர்’ஆனுக்கு தமிழில் விளக்கம் சொல்கிறார்? அதை ஏன் மற்றவர்கள் கேட்கவேண்டும் அல்லது படிக்க வேண்டும்? சிந்தியுங்கள் சகோதர்களே… அன்புடன் கவலையுடன் நாகூர் ரூமி

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book